ராஜபாளையம்: ராஜபாளையத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை அனுமதி பெறவில்லை என கூறி தாசில்தார் அலுவலக பின்புறம் உள்ள செப்டிக் டேங்க் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் அதன் தலைவர் ராமராஜ் தலைமையில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
செப். 7 முதல் 13 வரை நடக்கும் விழாவிற்காக ராஜபாளையம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எதிரே பிரம்மாண்ட பந்தல் பணி முடிவடைந்து, நேற்று முன்தினம் (செப்., 2ல்) மாலை 6:00 மணிக்கு மகாராஜ கணபதி அலங்காரத்தில் பிரதான விநாயகர் சிலை டிராக்டரில் கொண்டு வரப்பட்டது.
சிலை கொண்டு வர அனுமதி பெறவில்லை என கூறி நள்ளிரவு 12:30 மணிக்கு டிராக்டருடன் விநாயகர் சிலையை தாசில்தார் அலுவலகம் கொண்டு சென்றனர். இதை செப்டிக் டேங்க் யொட்டி வைத்துள்ளனர். விழா நடைபெறும் வரை தினமும் பூஜிக்க வேண்டியை சிலையை கழிப்பிடம் அருகில் வைத்துள்ளது பக்தர்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. விழா அமைப்பாளர் ராமராஜ், "விழா தொடர நீதிமன்றத்தை நாடி உள்ளேன், என்றார்.