பதிவு செய்த நாள்
04
செப்
2018
11:09
கரூர்: கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு நடந்த, உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் போட்டிகளில், இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். கரூர், பண்டரிநாதன் கோவிலில், ஒவ்வோர் ஆண்டும், கிருஷ்ணர் ஜெயந்தி விழா, விமரிசையாக கொண்டாடப் படுகிறது. இந்த ஆண்டு, 97ம் ஆண்டு விழாவாக கொண்டாடப்பட்டது. ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு கோவிலுக்கு வந்தனர். அதன் பின், கோவில் முன் நடந்த உறியடி போட்டியில், ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். அடுத்து கோவில் முன் வைக்கப்பட்டிருந்த, 60 அடி உயர வழுக்கு மரத்தில், ஏராளமான இளைஞர்கள் ஏறினர். மரத்தின் மேல் கட்டப்பட்டி ருந்த பரிசுப் பொருட்களை எடுக்க, இளைஞர்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டனர். போட்டியை, ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.