பதிவு செய்த நாள்
04
செப்
2018
11:09
கோத்தகிரி: கோத்தகிரி ஒன்னதலை ஹெத்தையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கோத்தகிரி ஒன்னதலை கிராமத்தில், ஹெத்தையம்மன் கோவில், முன்புற வாசல் விரிவுப் படுத்தி, புனரமைப்பு பணி நடந்து முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் நடந்தது. ஊர் தலைவர் பெள்ளா கவுடர் முன்னிலையில், பூசாரிகள் சிவா, போஜன் மற்றும் கோபால் ஆகியோர், கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
தொடர்ந்து, ஹெத்தையம்மன், ஹிரோடைய்யா தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப் பட்டது. இதில், ஒன்னதலை ஊர் மக்கள் உட்பட, சுற்றுவட்டார கிராம ஹெத்தையம்மன் செங்கோல் பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப் பட்டது. இவ்விழாவின் ஒரு நிகழ்வாக, கோவில் அருகே சமுதாய கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், எம்.பி., அர்ஜூணன், எம்.எல்.ஏ.,கள் சாந்திராமு, கணசேர் உட்பட, ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்துக் கொண்டனர்.