பதிவு செய்த நாள்
04
செப்
2018
12:09
மோகனூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், கலச விளக்கு வேள்வி பூஜை, ஆடிப்பூரம் கஞ்சி கலயம் எடுக்கும் விழா, மோகனூரில் நடந்தது. நேற்று முன்தினம் (செப்., 2ல்) காலை, 7:00 மணிக்கு, சக்தி கொடி ஏற்றுதல், கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. காலை, 9:00 மணிக்கு, ஆடிப்பூர கஞ்சிக்கலய ஊர்வலம் துவங்கியது. சுப்ரமணியபுரத்தில் துவங்கிய ஊர்வலம், ப.வேலூர் சாலை, பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, மாரியம்மன் கோவில் வழியாக, வழிபாட்டு மன்றத்தை அடைந்தது. தொடர்ந்து, சுமங்கலி பூஜையும், பிரசாதமும் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.