பதிவு செய்த நாள்
05
செப்
2018
01:09
மாமல்லபுரம்: கேரள கோவில் வழிபாட்டுக்காக, சிற்ப சாஸ்திர முறைப்படி, 32 விநாயகர் சிலைகள், மாமல்லபுரம் சிற்பக்கூடத்தில் வடிக்கப்பட்டுள்ளன.
சைவக் கோவிலில், முழு முதற்கடவுள் விநாயகர் வழிபாடு குறிப்பிடத்தக்கது. இக்கடவுளை, பால, பக்த, தருண, வீர, இறுதியாக, சங்கடஹர கணபதி என, 32 தோற்ற விநாயகர்களாக, சிற்ப சாஸ்திரம் வரையறுத்துள்ளது.
கோவில்களில், பொதுவான, ஒரு தோற்ற விநாயகர் மட்டுமே, பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடக்கும்.
இந்நிலையில், கேரள, நெய்யாற்றங்கரை அருகாமை, செங்கால் பகுதி, சிவசக்தி ஷேத்திரம் என்ற தனியார் கோவிலில், வழிபாட்டுக்காக, 32 தோற்ற விநாயகர் கற்சிலைகள், விநாயகர் சதுர்த்தி நாளில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
இச்சிலைகள், பீடத்துடன், தலா, 3 அடி உயர, 2 அடி அகலத்தில், அரசு சிற்பக்கல்லூரி ஓய்வு பெற்ற விரிவுரையாளர் யு.பத்மநாபனின், சரவணா சிற்பக்கூடத்தில், தற்போது வடிக்கப் பட்டுள்ளன.