திருப்போரூர் அனுமந்தபுரம் வீரபத்ரன் கோவிலில் தீ தடுப்பு கருவி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2018 12:09
திருப்போரூர்:அனுமந்தபுரம் வீரபத்ர சுவாமி கோவிலில், தீத்தடுப்புக் கருவி பொருத்தப் பட்டுள்ளது.
மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலில், சில மாதங்களுக்கு முன், தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கோவிலில் தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டு, அணையா விளக்கு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அறநிலையத் துறை சார்பில், அனுமந்தபுரம் வீரபத்ர சுவாமி கோவிலில், தீத்தடுப்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.