திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சயன கோலத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா செப்., 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும். விழாவில் நேற்று விநாயகர் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செப்.12 ல் தேரோட்டமும், சந்தனக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் எழுந்தருளலும் நடைபெறும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் கோனாபட்டு அருணாசலம் செட்டியார் மற்றும் அரிமளம் சிதம்பரம் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.