பதிவு செய்த நாள்
10
செப்
2018
02:09
ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத தேர்திருவிழா வரும், 14ல் தொடங்குகிறது. 21ல் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்துக்கு, இடையூறு ஏற்படும் வகையில், சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காமராஜர் வீதி வழியாக, சிக்கல் தொடர்கிறது. இதுகுறித்து கோவில் பணியாளர்கள் கூறியதாவது: காமராஜர் வீதி, 30 அடி அகலத்தில் இருந்து, 20 அடியாக குறைந்து விட்டது. மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகே, 15 அடிக்கும் குறைவாக சுருங்கி விட்டது. அந்த இடத்தில் இரண்டு மின்கம்பங்களும் உள்ளன. இதனால் அந்த இடத்தில், தேர் வரும்போது, சாக்கடைக்குள் இறங்கி விடுமோ என்ற அச்சம் தொடர்கிறது. ஆக்கிரமிப்பாளர்கள் அதைப்பற்றி கவலைப் படுவதில்லை. இப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிம்மதியாக தேரோட்டம் நடத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர், ஆர்.டி,ஓ., தாசில்தார், மாநகராட்சி அலுவலகதில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.