விழுப்புரத்தில் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் கஞ்சி வார்த்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2018 12:09
விழுப்புரம்: விழுப்புரம் நாராயண நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் கஞ்சி வார்த்தல் மற்றும் பால் அபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து தேவராஜ், சக்தி கொடியேற்றினார். பின்னர் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் இருந்து அக்னி சட்டி மற்றும் கஞ்சி கலய ஊர்வலமும், காலை 11:00 மணிக்கு கஞ்சி வார்த்தலை தொடர்ந்து கருவறை அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது.
விழாவிற்கு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் மாவட்ட இணை செயலர் மணிவாசகம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயபாலன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஆதிவாலீஸ்வரர் கோவில் தர்மகர்த்தா வேலாயுதம் முன்னிலை வகித்தார். விழுப்புரம் வட்ட வேள்விக்குழு தலைவர் பாலசுப்ரமணியம், நந்தகோபால், அசோக், கண்ணதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.