பதிவு செய்த நாள்
14
செப்
2018
03:09
சிவாகமங்கள்
ஆகமம் என்றால் இறை வழிப்பாட்டு முறை கூறுவது மட்டுமல்லாது வேதங்களில் கூறும் அனைத்து வாக்கியங்கள் கருத்துக்கள், உண்மைகள் இவற்றின் வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் ஒரு சூத்திரம் சட்டம், நியதி என்பனவற்றின் அடிப்படையே ஆகமம். அத்துடன் இறையினுள் இயைந்திடும் வழிகூறுவதாகும். இதையே ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க என்பதற்கிணங்க.
ஆகமம் - ஆப்த வாக்கியம். ஆ - ஞானம், க - மோட்சம் வீடு, ம - மல நாசம். எனவே ஆன்மாக்களுக்கு மும்மலம் போக்கி ஞானத்தையுதிக்கச்செய்து மோட்சத்தை தருதல் எனப் பொருள்படும். சித்தாந்தம் மிகை படவே "வேதமே சிவகாமம் எனக் கூறுகிறது. வேதாகமச் சென்னியில் விளைபொருள் பேதம்"" என ஸ்ரீ பரஞ்சோதி முனிவர் கூற்றுக்கிணங்க சிவாகமச் சிறப்புப் பற்றி சொல்லியபடியே செல்லலாம். ஆகவே இறைவழிப்பாட்டை முறைப்படுத்தியது ஆகமமே. ஆகமங்கள் 25 என்பர். இறைவனால் இவைகள் முனிவர்களுக்கு உபதேசித்தருளப் பட்டவைகள் ஆகும்.
கௌசிக முனிவருக்கு உபதேசிக்கப்பட்டவைகள்
1. காமிகம்
2. யோகஜம்
3. சித்தியம்
4. காரணம்
5. அஜிதம்.
பரத்வாஜ முனிவருக்கு உபதேசிக்கப்பட்டவைகள்
1. தீப்தம்
2. சூட்சம்
3. சகஸ்ரம்
4. அம்சமான்
5. சுப்ரபேதம்
கௌதம முனிவருக்கு உபதேசிக்கப்பட்டவைகள்
1. ரௌரவம்
2. மகுடம்
3. விமலம்
4. சர்வோத்தரம்
5. விபவம்
அகஸ்திய முனிவருக்கு உபதேசிக்கப்பட்டவைகள்
1. புரோத்கீதம்
2. வீரம்
3. பாரமேஸ்வரம்
4. கிரணம்
5. பேதம்
6. வாதுளம்
7. விஜயம்
8. நிசுவாசம்
9. சுவாயம்புவம்
10. அனலம்
11. உத்ர காமீ
12. பூர்வ காரணா
13. லளிதம்
ஆகம முறையின்படி கட்டப்பட்ட கோவில்களில் சிலா பிரதிஷ்டை, தினசரி பூஜை மற்றும் விழாக்கள், எனப் பலவாக, சைவ வைணவ சமயநெறி, வேதஆகம சம்பிரதாயம் எனப் பழங்காலம் தொட்டு முன்னோர்களால் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதாகும். இதன்வழியில் சிறிய, பெரிய கோவில் திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகங்களும், அடங்கும். யந்திரப்பிரதிஷ்டை முதல் சிலா பிரதிஷ்டை வரை முழுக்க ஆகம விதிகளின்படி அந்நாளில் ரிஷிகள், அரசர்கள், ஏனைய பெரியோர்களால், சிற்ப சாஸ்திரத்தின் வழி வந்த ஸ்தபதிகள் எனச் சேர்ந்து திருக்கோவிலை இறையின் இருப்பிடமாக்கி ஆன்மிகத் தொண்டாற்றியுள்ளனர். மனித இனத்திற்கு மட்டுமல்லாது உலகின் எல்லா உயிர்கட்கும் இறைவனே தலைவன், அவனே மிகப்பெரியவன், யாவும் அவனுடையதே என்ற உண்மையே உலகோர்க்கு உணர்த்தும் புனிதத்தலமே திருக்கோவிலாகும்.
ஸ்ரீ மீனாக்ஷிசோமசுந்தரேஸ்வரர் திருக்கோவிலைப் பொருத்தமட்டில் தலம், மூர்த்தி, தீர்த்தம் எனக் கோவில் ஆகமமும், நகர் அமைப்பு ஆகமமும், மிகத் தொன்மையான சைவ ஆகமநெறி அணுவேனும் பிசகாது அமைந்தவிதம் அறிந்தோர்க்கும் உணர்ந்தோர்க்கும் இன்றும் இறைத் திருவிளையாடலை நெகிழ்ந்து நினைக்க வைக்கும் பேரதிசயமாகும்.
ஆகமம் என்றால் இறைவழிபாட்டு முறை மட்டுமல்லாது இறையுள் இயைந்திடும் வழி கூறுவதாகும். ""ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாழ் வாழ்க எனப்போல்.