1. முதற்காலம் : திருவனந்தல் காலை 5-15மணி முதல் 2. இரண்டாம் காலம் : விளாபூஜை காலை 7-மணி முதல் 3. மூன்றாம் காலம் : காலசந்தி காலை 8-மணி முதல் 4. நான்காம் காலம் : திருகாலசந்தி காலை 10-மணி முதல் 5. ஐந்தாம் காலம் : உச்சிகாலம் காலை 10-30 மணி முதல் 6. ஆறாம் காலம் : சாயரட்சை மாலை 4-30 மணி முதல் 7. ஏழாம் காலம் : அர்த்தஜாமபூஜை இரவு 9-00 மணி முதல் 8. எட்டாம் காலம் : பள்ளியறை இரவு 10-மணி முதல்
இவ்வெண்கால பூஜையில் ஒவ்வொரு காலத்தும் அன்னை ஸ்ரீ மீனாக்ஷி எட்டுக் கோலங்களில் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறாள். அவை முறையே 1. மகாசோடசி 2. புவனை 3. மாதங்கி 4. பஞ்சதாட்சரி 5. பாலை 6. சியாமளை 7. சுகசியாமளை 8. சோடசி எனப்படும் மந்திர ரூபிணியாய் நின்றருள்புரிவாள். இவ்வெண்கால பூஜைகள் ஒவ்வொன்றிற்கும் முன்பாக அபிஷேகம், அலங்காரம், நிவேதனம், சோடசோபசாரம் 16 உபசாரங்கள், தீபம், தூபம், கந்தம், விளக்கு, கர்பூராஞ்சல் என வரிசையாக பூஜை முறைகள் நிகழும். அன்னை ஸ்ரீ மீனாக்ஷிபெருமாட்டி இறைவனுடன் இரண்டறக் கலந்த பாகம்பரியாளாய் வாம பாகத்தே என்றும் இணைபிரியாது பிரியாவிடையாயும் ஐக்கிய பந்தம் ஸ்ரீ மீனாக்ஷிபெருமாட்டி அம்ச பந்தம் சிவத்தினின்றும் இரு கூறுகளாய் திகழ்கின்றாள்.