பதிவு செய்த நாள்
14
செப்
2018
03:09
பெரும்பற்றப்புலியூர் நம்பி
""நந்தார்சுரர் செந்தாமரை வந்தார்தொழும் எந்தாய்
நாதாஅதி பூதாசதுர்வேதா இதகீதா
பந்தார்விரல் வண்டார்வரி வாண்தார் குழல் கொண்டாள்
பாகா எனது ஆகாபர யோகசிவ லோகா
முந்தாதர கங்காதர சங்காரவி டங்கர்
மூலாகம நூலாகுண சீலாதில சூலா
தந்தா என நின்றாடிய பொன்தாழ்மணி மன்றார்
தாளா அருளாளா நினது ஆளா எனை ஆளே
ஆகமம்-ஆப்தவாக்கியம்.
ஆ-ஞானம்,
க-மோட்சம் வீடு,
ம-மல நாசம்.
எனவே ஆன்மாக்களுக்கு மும்மலம்போக்கி, ஞானத்தை யுதிக்கச்செய்து மோட்சத்தைத் தருதல் எனப்பொருள்படும்.
சித்தாந்தம் மிகைபடவே, ""வேதமே சிவாகமம் என்றது. ""வேதாகமச் சென்னியில் விளைபொருள்வேதம் என ஸ்ரீ பரஞ்சோதி முனிவர் கூற்றுக்கிணங்க, சிவாகமச்சிறப்பு பற்றி சொல்லியபடியே செல்லாம். ஆகவே இறைவழிப்பாட்டை முறைப்படுத்தியது ஆகமமே. 100 கால்மண்டபம், 1000 கால்மண்டபம், 25 மூர்த்திகளின் தியான வடிவங்கள், 5 விதமான நிருத்த மூர்த்திகளின் ஸ்தானங்கள், தங்கம் ஐம்பொன்னும், வெள்ளி, செப்புச்சிலை, சுதை என ஐந்துவகை மூர்த்திகளின் வடிவங்களும், இன்றும் சைவாகமச் சிற்பாகமச் சிற்பசாஸ்திர முறைப்படி, பாதபந்தம், பிரதிசுந்தரம், என வாக்கபேத உப பீட அமைப்புகளில் காணப்படுவதாலும் முழுக்க முழுக்க இவ்வாலவாயன் திருக்கோயில் ஆகம மறுபதிப்பாய்தோற்றச் செய்தவிதம் பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது.
இவற்றையெல்லாம் "சைவ நெறி என்ற சைவசித்தாந்த ஆகம வேதங்களின் சிறப்புகளாகும். இதனை அன்றைய சாஸ்திர பண்டிதர்களின் மிகச் சிறந்தவர்களான, அகிலாண்ட சிவாச்சார்யார், அகோர சிவாச்சாரியார், ஈசான குருதேவர், ஆகியோர்களின் "பத்ததியின் படியும், ஹாலாஸ்ய மஹாத்மிய நூலில் காணப்படும் நெறியின்படியும், இன்றளவில் மாறாத பூஜைமுறையும், திருவிழாக்களும் நடைபெற்று வருவது இத்திருக் கோவிலின் சிறப்புகளின் சிகரமெனலாம்.
சித்தியார் செய்யுள் இதை விளக்குவதாகும்.
""ஒழுக்கம், அன்பு அருள் ஆசாரம், உபசாரம், உறவு சீலம் வழுக்கில்லாத் தவம், தானங்கள் வந்திதல் வணங்கல், வாய்மை அழுக்கிலாத்துறவு அடக்கம் அறிவோடு அர்ச்சில் ஆதி இழுக்கிலா அறங்கள் ஆனால் இரங்குவான் பணி அறங்கள்.
ஒவ்வொரு உலக உயிரும் சிவனைத் தன்மையாகக் கொண்டு பரமசிவத்தோடு ஐக்கியமாக வேண்டுமென்தே சைவநெறி வெளிப்பாடாகும். அதையுணர்த்திய சிவனடியார்களான அறுபத்து மூவர் பரவித் தெளிந்த வழிமுறைகளே சரியை, கிரியை, யோகம், ஞானம், என்ற இந்நான்கும் நிச்சயவழிகள். இவ்வழிவகைகளைக் குருமுகமாக அறிதலே சிறப்பும் பயனளிக்க வல்லதுமாகும்.
இவ்வாகம முறைப்படி திருஆலவாய் அப்பனின் அம்மையின் சிவபூஜாமுறை, காமீக காரண ஆகமமுறைப்படி இன்றளவும் பூசனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
""எண்ணிலாகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும்
உண்மையாவது பூசனை.
ஆகமத்திலுள்ளப்படி ""சர்வதோபத்ரம் அமைப்பிற்கேற்ப உருவனாதே மதுரைப்பதியாகும்.
.....நந்தியாவர்தஞ்ச பதரஞ்ச பிரகீர்ணகம்,
க்ரமாக்ர ஹாரயோர் ந்யாஸமேவம் பரோக்தம் விசேஷம்:
என்பதற்கிணங்க மதுரை சம சதுர அமைப்புகளுடனும், நான்குவீதிகளும் சேர்ந்தப்படி அமைக்கப்பட்ட நகராகும். மேலும் காமீகாகமத்தின்படி சதுஸ்சாலா, சதுஷ்கடயுத்தை: கைலாஸ ஏவஹி நான்மாடக் கூடலின் தமிழ்விளக்கம் அவ்வண்ணமே தினசரி பூஜாகாலங்களும், முறைகளும், ஆகமநெறிப்படியே நிகழ்வதும் கீழ்கண்ட ஆகம வாக்கியத்திற்கண்படியே என்பதை அறியலாம்.
""பாஸ்க்கரே தயாத் பூர்வம்
ஸத்ரிபாத த்ரி ணடிகா
உஷ: கால மிதிப் ரோக்தா
பூர்வான்னஸ்து தத பரம்
பாஸ்க்கரோதய மார்ப்ய
சார்த்த ஸப்ததஸ நாடிகா
பூர்வசந்திரி திப்ரோக்தா
உப சந்நிர்த்த தர்த்தக:
உபசந்தியாத மாரப்ய யாமோ
மத்யன்ஹ உச்யதே
பாஸ்கராஸ் தமயாத் பூர்வம்
திரிபாதே நத்ரி நாடிகா
பிரதோஷ இதிவிக்யாதா
ஸாயங்கால மதஸ்ருணு
பிரதோ ஷாந்தம் ஸமாரப்ப
த்ரிபாதே ந த்ரிநாடிகா
ஸாயங்கால மிதிப்ரோக்தம்
அர்த்தயாமந் தஸ்ருணு
ஸாயான் ஹாந்தம் ஸமாரப்ப
திரிபாதே நத்ரி நாடிகா
அர்த்தசாமம் இதிப்ரோக்தம்
இதி ஷட்கால நிர்ணயம்.
திருமலைநாயக்கர் காலத்தில் கீழ்க்கண்டபடி எட்டுகால பூஜைமுறைகளை ஸ்ரீ நீலகண்ட தீட்ஷிதர் அவர்கள் கால நிர்ணயங்கள் செய்து காமிக காரண ஆகம முறைகளில் குற்றம் ஏற்படாதபடி நடந்து வரச் செய்தார்.