கோயில் நிலப்பரப்பு 15 ஏக்கர். வெளிச்சுவரின் நீளம் சுமார் 847 அடி, அகலம் 792 அடி.
திருவிளையாடல் புராணம் - திருநகர் 3ல்
பாண்டிய நாட்டைப் பெண்ணாக உருவகப்படுத்திய வண்ணம். இவ்வுலகு ஒரு அழகிய பெண்ணின் மார்பில் ஒளிவீசும் பதக்கம். பாண்டிய நாட்டிலுள்ள ஏனைய பிற நகரங்களாகும். பதக்கத்தின் நடுமையாக விழிபறிக்கும் ஒளிவீசித் திகழும் சிறந்த மாணிக்கக் கல்லே மதுரை நகர் ஆகும்.
""வடுவின் மாநில மடந்தைமார் பிடைக்கிடந் திமைக்கு படுவிரலாமே பாண்டி நாடார மேற்பக்கத் திடுவின் மாமணியதன் புற நகரெலா யிவற்றுள் நடுவினாயக மரமணி மதுரை மாநகரம் பரிபாடல்
கடம்பவனத்தை அழித்து மதுரை மாநகரை உருவாக்கியவன் குலசேகர பாண்டியன். மதுரை நகரின் தெருக்கள் தாமரை மலரின் உள்ளிதழ்களைப் போல் அடுக்கடுக்காக அமைந்துள்ளது. ஸ்ரீ மீனாக்ஷி யம்மை கோயில், தாமரை மலரில் நடுவில் உள்ள மகரந்தத் துகள்களைப் போல் அமைந்துள்ளது. தாமரையை நோக்கி வாழ்வு தேடிவரும் இரவலர் கூட்டம் தாமரையில் தேன் பருக வரும் வண்டுகளுக்கு ஒப்பாவார். வையை வைகை ஆறு, பண்டைக்காலத்தில் வற்றாத நீர்வளமையுடன் பரந்திருந்தது. ஆற்றின் வெள்ளம் பலகாலங்களில் கரை மீறிப் பெருக்கெடுத்துவரும் போது, கரையோர மக்கட்குத் துயர் நேராதிருக்கும் பொருட்டு அவர்களைக் காப்பதற்க்கென ""கரைகாவலர்கள் என்ற பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பு : இன்றைய மதுரைக் கிராமப்பகுதிகளில் ""கரைகாரர்கள் எனப்படுபவர்கள் தான், அக்கால கரை காவலர்கள் வரிசையில் வந்தவர்கள். செல்வம், புகழ், பொறுப்புணர்வுமிக்கவர்களின் வாரிசுகள்தான் இன்றை மதுரை கிராமப்பகுதிகளில் ""கரை காவலர்கள் முதல் மரியாதைக்குரியநில உடைமையாளர்களாக இருந்தவர்களாகும். தென்தமிழகத்தின் அன்றுமுதல் பழம்பெரும் நகரங்களுள் மதுரைமாநகரம் பெரிதும் சிறந்ததென இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னிருந்தே சீரும் சிறப்பும் பேரும் புகழும் உடைத்த நகரமாக விளங்குகிறது.
சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூர் காவிரிபூம்பட்டினம் போன்ற நகர்களும், சேரர்களின் தலைநகரென வஞ்சி, கருவூர் முதலிய நகரங்களும் தத்தம் பெருமைகளை இழந்து இன்று எளிய சிற்றூர்களாகவே உள்ளன. ஆனால் பாண்டியர்களின் தலைநகர்களாகிய மதுரையும் பல்லவர்களின் தலைநகரம் காஞ்சியும் மட்டுமே இன்றும் தத்தம் பழமைக்கு கட்டியம் கூறும் வண்ணம் குன்றாமல் குறைவின்றி நின்று நிலைத்து சிறந்த பெருநகரங்களாக விளங்கி வருகின்றன. இம் மதுரை மாநகர் தமிழ்நாட்டில் பெருமையை விளக்குவதாக அமைந்த தோடன்றி இப்பாரத்தின் பண்பார் சமயநெறியின் உயர்வைக்காட்டுவதாகவும் அமைந்ததுவே.
இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் 13:179-180. வையை ஆற்றின் ஓடப் போக்குவரத்து பலவகைப்படதெனவும், அவ்வோடங்களின் முகப்புகள் குதிரை, யானை, சிங்கம், முகங்களைக் கொண்டதாயிருந்திருக்கிறதெனவும், அவ்விடம் பல கட்டுமரங்களும் இருந்து வந்ததெனவும் கூறுகின்றது. ""வையை என்ற பொய்யாக்குலக்கொடி - புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி வைகை நதி எனப் புகழ்கிறார். பழங்காலத்தனியார் பாராட்டு கி.பி. முதல் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த பிளினி மற்றும் கி.பி. 140-ல் வாழ்ந்த தாலமி போன்றவர்களால் எழுதப்பட்ட நூல்களில் மதுரையின் சிறப்பு விரிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.