சிறந்த மேனாட்டு வரலாற்று ஆசிரியர் ஷெனாய் நட்ங்ய்ர்ஹ் அவர்களின் நூலில் ஙஹக்ன்ழ்ஹண் ற்ட்ங் ற்ங்ம்ல்ப்ங் ஸ்ரீண்ற்ஹ் திராவிட நாகரிகம், பண்பாடு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் திகழ்கிறது. “Madurai is the Athens of south india . தென்னிந்தியாவின் ஏதென்ஸ் நகரம் மதுரையாகும், என குறிப்பிட்டிருக்கிறார்.
Madura-dt.gazettor கீழ்க்கண்ட செய்திகள் ரோமானியர்களுக்கு மதுரை நகரில் ரோமானியர் குடியிருப்பு ஒன்று இருந்திருக்கிறது. கி.பி. 1839-ல் மதுரைக்கு அருகில் உள்ள திருமங்கலத்தில் அகழ்ந்த ஆய்வில் நர்ப்ண்க்ன்ள் ர்ச் ழங்ழ்ர் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. 27-ல் அகஸ்டாஸ் சீஸரிடம், அதாவது ரோமானிய சக்ரவர்த்தியிடம் பாண்டியஅரசன் தூது அனுப்பிள்ளான். அம்மன்னனின் தங்க-நாணயங்கள் 63-ம், பலவித நாணயங்கள் மதுரை மாவட்டத்தின், பழனிவட்டத்தைச் சேர்ந்த கலையம்புத்தூரில் பூமிக்கடியில் சிறிய பானைகளில் இருந்தவைகளாய்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை நகரில் இருவகைக் கடைத்தெருக்கள் இருந்ததெனவும், பகற்பொழுதில் வணிகம் செய்யப்படும் கடைகளை ""நாளங்காடி என்றும், இரவுப்பொழுது முழுவதும் இயங்கம் வணிக்கடைகளை ""அல்லங்காடி எனவும் கூறப்பட்டன.