திருப்பதி: ஆந்திர மாநிலம், திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம், கருட கொடியேற்றத்துடன், செப்.,13ல் கோலாகலமாக துவங்கியது. விழாவின் இரண்டாம் நாளான செப் 14ல் உற்சவரான மலையப்பசாமி சரஸ்வதி அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.