திருப்பதி : திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் எட்டாவது நாளான இன்று(செப்.,20ல்) தேரோட்டம் நடைபெற்றது.
திருமலை திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவின் 8 வது நாளான இன்று (செப்.,20ல்) காலை ரத உற்சவம் நடைபெற்றது. கோயிலின் பெரிய தேரில் மலையப்ப சுவாமி தேவியருடன் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் வலம் வந்து அருள்பாலித்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.