வால்பாறை : வால்பாறை கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி தினமான நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகன் தேவியருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் முடீஸ் சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் சஷ்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.