திருவேங்கடம்:சங்கரன்கோவில் தாலுகா ப.ரெட்டியபட்டி குபேர விநாயகர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.ப.ரெட்டியபட்டி மேலத்தெரு சாலையோரம் அர்ச்சகரும், அதிமுக பேச்சாளருமான சரவெடி சத்தியநாராயணன் புதிதாக குபேர விநாயகர் கோயில் அமைத்துள்ளார். இதற்கான கும்பாபிஷேகத்தை நடத்தினார். பின் விநாயகருக்கு பல்வேறு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயரால் அர்ச்சனையும் நடத்தினார். திரளானோர் கலந்து கொண்டனர்.