சாத்தான்குளம்:சாத்தான்குளம் ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் ஆலய கும்பாபிஷேகவிழா 6ம் தேதி நடக்கிறது.விழா நாளை காலை மங்களவாத்தியத்துடன் துவங்குகிறது. மாலை தேவிஸ்ரீ அழகம்மன் கோயிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு யாகசாலை பூஜை துவங்குகிறது. இரவு பூர்ணாகுதி தீபாராதனை நடக்கிறது. 5ம் தேதி இரண்டாம் காலயாக பூஜை நடக்கிறது. 6ம் தேதி மஹாகும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது.