திண்டுக்கல்:ஆண்டுதோறும் பிரமோற்ஸவத்தை முன்னிட்டு பழநி புஷ்ப கைங்கர்ய சபா சார்பில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும்.
பிரமோற்ஸவத்தின் 8 வது நாளான நேற்று (செப்.,18ல்) திண்டுக்கல் பூமார்க்கெட்டில் இருந்து வாடாமல்லி, செண்டுமல்லி, விரிச்சிப்பூ, செவ்வந்திப்பூ, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூவகை கள் மொத்தம் 600 கிலோ பஸ் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வருடத்தில் இதுவரை 20 டன் வரை பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வருகிற அக்., 9 முதல் 18 வரை நடக்கவுள்ள அடுத்த பிரமோற்ஸவத்திற்கும் அனுப்ப உள்ளதாக சபா செயலர் மருதுசாமி தெரிவித்தார்.