பதிவு செய்த நாள்
19
செப்
2018
11:09
காங்கேயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், செம்மண் வைக்கப்பட்டுள்ளது. இதனால், மண் விற்பனை செய்வோர், கடும் நெருக்கடிகளை சந்திக்கநேரிடும், என சிவாச்சாரியார்கள் கூறினர்.திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த, சிவன்மலை சுப்பிர மணிய சுவாமி கோவில், பிரசித்தி பெற்ற தலமாக உள்ளது.இங்கு ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. இதில், நூற்றாண்டு காலமாக, பக்தர்கள் தரும் பொருள் வைத்து, பூஜிக்கப் படுகிறது.என்ன பொருள் வைப்பதென்று, பக்தர்கள்கனவில், சிவன்மலை ஆண்டவர் கூறுவார்.
உத்தரவு பெற்ற பக்தர்கள் கோவிலுக்கு செல்வர். அங்கு பூ வாக்கு கேட்டு உறுதி செய்த பின், அவர்கள் கொண்டு செல்லும் பொருள், பெட்டியில் வைக்கப்படும்.அடுத்த உத்தரவு வரும் வரை, முந்தைய பொருள் நீடிக்கும்.இதில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது தாக்கத்தை அல்லது நடக்கப்போவதை, முன்கூட்டியே குறிப்பால் உணர்த்தப்படுவதாக, அமையும் என்பது ஐதீகமாக உள்ளது.கடந்த ஜூலை, 6- முதல், செம்பு
அம்பு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த மகாலட்சுமி, 45, என்பவரின் கனவில், செம்மண் வைக்க உத்தரவாகியுள்ளது.நேற்று முதல் பெட்டியில், செம்மண் வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கோவில் சிவாச்சாரியார்கள் கூறியதாவது: ஆண்டவர் உத்தரவு பெட்டியில், ஏற்கனவே மண் வைக்கப்பட்டபோது, நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது.தற்போது மீண்டும் மண் வைக்கப்பட்டுஉள்ளதால், மண் சார்ந்த பிரச்னை ஏற்படும். அத்தொழிலில் ஈடுபட்டவர்கள், நெருக்கடியை சந்திக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து மகாலட்சுமி கூறியதாவது:சிவன்மலைக்கு, 15 ஆண்டுகளுக்கு முன்சென்றுள்ளேன்.கடந்த, 11 இரவு, முருகன் கனவில் தோன்றிய சிவன்மலை முருகன், என் சன்னதியில் உள்ள பெட்டியில், செம்மண் வை என்று சொல்லிவிட்டு மறைந்தார்.அதன்படி செம்மண் அளித்தேன்.இவ்வாறு அவர்கூறினார்.