பதிவு செய்த நாள்
19
செப்
2018
11:09
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி, கடந்த 17ம் தேதி முதல், புரட்டாசி மாதம் முழுவதும் மூலவர் பெருமாள் திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி நெய்தீப தரிசனத்தில் அருள்பாலிக்கிறார்.
அதனையொட்டி, நாளை முதல் தினமும் காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம், 6:15 மணிக்கு கோ பூஜை, 7:00 மணிக்கு தோமாலை சேவை, 9:30 மணிக்கு நித்யகல்யாண உற்சவம், பகல் 12:00 மணிக்கு உச்சிகாலம், மாலை 4:30 மணிக்கு நடைதிறப்பு, மாலை 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மாலை 5:30 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி, பூமி தேவி சகிதமாக பெருமாள் ஊஞ்சல் சேவை, மாலை 6:00 மணிக்கு சாயும் தோமாலை, இரவு 8:30 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.புரட்டாசி மாதம் பிரதி புதன்கிழமை 108 கலச திருமஞ்சனம், வியாழக்கிழமை நேத்ர தரிசனம், பூவாலங்கி சேவை, சனிக்கிழமை சகஸ்ர தீப சேவை நடக்கிறது.