பதிவு செய்த நாள்
21
செப்
2018
12:09
புதுச்சேரி: மொரட்டாண்டி சனி பகவான் கோவிலில், குரு பெயர்ச்சியையொட்டி, வரும் 4ம் தேதி, மகா யாகம், லட்சார்ச்சனை நடக்கிறது. புதுச்சேரி திண்டிவனம் சாலை, மொரட்டாண்டியில் உள்ள சனீஸ்வரபகவான் கோவிலில், வரும் 4ம் தேதி இரவு, 10.05 மணிக்கு குரு பகவான் துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார்.
குரு பெயர்ச்சியையொட்டி, 12 அடி உயர குரு பகவானுக்கு சிறப்பு மகா யாகம் மற்றும் லட்சார்ச்சனை நடக்கிறது. வரும் 4ம் தேதி, காலை 7:30 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம், 1008 கொழுக்கட்டை நிவேதனம், 30 விதமான அபிஷேகமும், காலை 10:00 மணி முதல் குருசாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம், ராசிஹோமம், தக்ஷிணாமூர்த்தி ஹோமம், ராசி பரிகார ஹோமம், 1008 லிட்டர் பால் அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு கலச அபிஷேகம் மற்றும் 1008 கிலோ சுண்டல் நிவேதனம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 5ம் தேதி முதல், அக்டோபர் 15ம் தேதி வரை, தினமும் லட்சார்ச்சனை நடக்கிறது. ஹோமத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு குரு யந்திரம், கனகபுஷ்பராகம், ராசிக்கல், முடிகயிறு, தாயத்து, ரக் ஷை அளிக்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை சிதம்பர குருக்கள் செய்து வருகிறார்.