Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

வடக்கு ஈஸ்வரர் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை வடக்கு ஈஸ்வரர் கோயிலில் 1008 ... மொரட்டாண்டி கோவிலில் 4ம் தேதி குரு பெயர்ச்சி விழா மொரட்டாண்டி கோவிலில் 4ம் தேதி குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேகவதி நதிக்கரையில் 15 ம் நுாற்றாண்டு நடுகல்: பொதுமக்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2018
12:00

காஞ்சிபுரம் வேகவதி நதிக்கரையோரம், 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, போர்வீரன், அவரது மனைவியின் உருவம் பொறித்த நடுகல்லுக்கு, பொது மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். ஒரு நாட்டின் மீது படையெடுத்து வரும் எதிரிகளிடமும், கொடிய விலங்குகளிடமும் போரிட்டு, வீர மரணம் அடைந்தோருக்கு, கல் வைத்து வணங்கும் வழக்கம், பழங்காலத்தில் இருந்தது. அந்த கல்லில், கையில் வாளுடன் கூடிய உருவம் பொறிக்கப்படும்;  அவை, நடுகல் என, அழைக்கப்படுகிறது. அதன்படி, காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவில் இருந்து, அச்சுகட்டி தெரு எனப்படும், தும்பவனம் தெரு வழியாக சென்று, வேகவதி ஆற்று சிறுபாலத்தை கடந்தவுடன், நாகலுாத்து மந்தைவெளி தெரு உள்ளது. இத்தெருவில், விநாயகர் கோவில் அருகே, வலது புறம் ஓரத்தில், தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில், நடுகல் உள்ளது. இப்பகுதி மக்கள், இச்சிலையை கன்னியம்மன் என வழிபடுகின்றனர்.

இது குறித்து, காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர், சு.உமாசங்கர் கூறியதாவது: இந்த சிலை, 15ம் நுாற்றாண்டை சார்ந்தது. இது வீரர்களுக்கான நடுகல். அக்காலத்தில், போர்படை தலைவன், தளபதி அல்லது வீரன் ஒருவர் போரில் வீரமரணம் அடைந்துள்ளார். இறந்தவரின் சிதை தீயில், இறங்கிய அவரது மனைவி, தன் உயிரை மாய்த்துக்கொண்டதால், அவர்களது நினைவு சின்னமாக, இருவரது உருவம் பொறித்த சிலை அமைத்து வழிபட்டுள்ளனர். இச்சிலையில் உள்ள வீரனின் வலது கையில் போர்வாள், இடது கையில் வில் ஏந்திய நிலையில் உள்ளதை காணலாம். அதே போல் பெண் உருவம், தீக்குளித்ததின் நினைவாக பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு, (கோரதம்) ... மேலும்
 
temple
 அலங்காநல்லுார்: அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்ஸவம் ... மேலும்
 
temple
மண்ணடி: மண்ணடியில் அமைந்துள்ள, மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் கோவிலில், திருக்கல்யாணம் நிகழ்ச்சி, ... மேலும்
 
temple
சபரிமலை: பங்குனி உத்திரத்தையொட்டி, சபரிமலை அய்யப்பனுக்கு, பம்பையில் ஆராட்டு வைபவம் நடந்தது. தொடர்ந்து ... மேலும்
 
temple
 புதுச்சேரி: பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, திருப்பதியில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.