பதிவு செய்த நாள்
06
பிப்
2012
11:02
திருக்கோவிலூர்:பகவான் யோகி ராம்சுரத்குமார் குரு மகராஜின், 11ம் ஆண்டு ஆராதனை விழா, வரும் 17, 18ம் தேதிகளில் நடக்கிறது.திருவண்ணாமலையில் உள்ள ஆசிரம வளாகத்தில், யோகி ராம்சுரத்குமார் குரு மகராஜின், 11ம் ஆண்டு ஆராதனை விழா, வரும் 17, 18ம் தேதிகளில் நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 17ம் தேதி காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, ஹோமம், அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனையும் நடக்கிறது. 11 மணிக்கு, பக்தர்கள் பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.மறுநாள் காலை 6.30 மணிக்கு, மகான்யாசம், அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள், பூஜைகளும், 9 மணிக்கு, தபோவனம் பூஜ்ய ஸ்ரீநித்யானந்தகிரி சுவாமிகள் முன்னிலையில், தீர்த்த நாராயண பூஜை, 11 மணிக்கு பக்தர்கள் பஜனை, மாலை 3.30 மணிக்கு, சற்குருநாதன் ஓதுவாரின் தேவாரம் இசை நிகழ்ச்சி நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, ஜஸ்டிஸ் அருணாசலம் செய்து வருகிறார்.