திருப்புத்தூர் :திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில்,பெருமாள், கோதை நாச்சியார் தைலக்காப்பு திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. உற்சவத்தை முன்னிட்டு மாலை ஆண்டாள் பெரிய சன்னதியில் எழுந்தருளினார். பின்னர் பெரிய பெருமாளிடம் பிரியாவிடைபெறும் வைபவம் நடந்தது. தொடர்ந்து திருப்பாவை வியாக்யானம் நடந்தது. இன்று காலை 10.30 மணிக்கு ஆண்டாள் தைலக் காப்பு மண்டபம் எழுந்தருளுகிறார். தொடர்ந்து தைலம் திருவீதி வலம் வருதலும், மாலை 4 மணிக்கு ஆண்டாள் நவகலச அலங்கார சவுரித்திருமஞ்சனம், இரவு 7 மணிக்கு சைத்யோபசாரம், திருவீதி உலாவும் நடக்கிறது. பிப்.8 மாலை 6 மணிக்கு ஆண்டாள் முத்துக்குறிப் பார்த்தலும், பிப்.9ல் காலை 10.30 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறும்.