பதிவு செய்த நாள்
06
பிப்
2012
11:02
திருநெல்வேலி:உலக அமைதிக்காகவும், மக்கள் நலமுடன் வாழவேண்டியும் நெல்லை சி.என்.கிராமத்தில் ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் நடந்தது.நெல்லை ஜங்ஷன் சி.என்.கிராமம் வீரராகவ காலனியில் அமைந்துள்ள சங்கர குரு குலத்தில் ஸ்ரீ ராதா மாதவ விவாஹ மஹோத்ஸவம் நடந்தது. மஹோத்ஸவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அஷ்டபதி பஜனை, நாம சங்கீர்த்தனம், தீபப்பிரதட்சணம், இரண்டாம் நாள் உஞ்ச விருத்தி, ஸ்ரீ ராதா மாதவ கல்யாண வைபவம் நடந்தது. கல்யாண வைபத்தை முன்னிட்டு பஜனை பாடல்கள் பாடப்பட்டன.வைபத்தை காசிவிஸ்வநாதன், பாலகுருநாதன், ராஜகோபால், மீனாட்சிசுந்தரம், ராமமூர்த்தி நடத்திவைத்தனர். கமிட்டி தலைவர் திருவேங்கடத்தான், காரியதரிசிகள் ராமசுப்பிரமணியன், சீனிவாசன், நாராயணன், உபதலைவர் கண்ணன், பொருளாளர் ராஜாராம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.