திருவேங்கடநாதபுரம் கோயில் தான் தென் திருப்பதி திருமலை திருப்பதி சின்ன ஜீயர் ஆசி வழங்கி பேச்சு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2012 11:02
திருநெல்வேலி:தென் திருப்பதி என்றால் அது மேலத் திருவேங்கடநாதபுரம் கோயிலை மட்டுமே குறிக்கும். திருப்பதி பெருமாள் தான் மேலத் திருவேங்கடநாதபுரம் கோயிலிலும் அருள் பாலிக்கிறார் என திருப்பதி சின்ன ஜீயர் கோவிந்த ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆசியுரை வழங்கி பேசினார்.தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று (6ம் தேதி) நடக்கிறது. நேற்றைய யாகசாலை பூஜையில் பங்கேற்க வந்த திருப்பதி சின்ன ஜீயர் கோவிந்த ராமானுஜ ஜீயர் சுவாமிகளுக்கு கோயில் நிர்வாகம், திருப்பணிக்குழு சார்பில் மேளதாளங்களுடன் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. யாகசாலை பூஜையில் கலந்து கொண்ட திருப்பதி சின்ன ஜீயர் ஆசியுரை வழங்கி பேசியதாவது:தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சிறப்பான முறையில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு நாளை (இன்று) கும்பாபிஷேக விழா நடக்கிறது. திருமலை திருப்பதியில் தற்போது உற்சவம் நடந்துவருகிறது. தென் திருப்பதி என்ற பெயரில் பல்வேறு கோயில்கள் அழைக்கப்படுகின்றன. தென் திருப்பதி என்றால் அது மேலத் திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலை மட்டும் தான் குறிக்கும். தென் திசையில் அமைந்துள்ள கோயில் என்பதால் திருப்பதியில் உள்ள பெருமாள் தான் இங்கு அருள்பாலிக்கிறார்.இக்கோயில் பிரார்த்தனை ஸ்தலமாக அமைந்துள்ளது.இங்கு யாகசாலை பூஜை, சம்ப்ரோக்ஷணம் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக நாள், கருடசேவை நாட்களில் மட்டும் பெருமாளை தரிசித்தால் போதாது. பக்தர்கள் தினமும் கோயிலுக்கு வரவேண்டும். உங்களது பிரார்த்தனைகளை பெருமாளிடம் வேண்டினால் தீர்வு கிடைக்கும்.பெருமாள் அனுக்கிரஹம் இருந்ததால் தான் இந்த சம்ப்ரோக்ஷண விழாவில் கலந்து கொள்ள முடிந்தது. கோயிலுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை தொடர்ந்து செய்யவேண்டும். கும்பாபிஷேகம் செய்தால் மட்டும் போதாது. தினமும் பகவான் நாமங்களை சொல்லவேண்டும். இக்கோயிலில் தேர் திருப்பணியையும் பக்தர்கள் செய்ய முன்வரவேண்டும். இவ்வாறு திருப்பதி சின்ன ஜீயர் கோவிந்த ராமானுஜ ஜீயர் ஆசி வழங்கினார்.