தாழையூத்து வடக்குவாச் செல்வி அம்பாள் கோயிலில் நாளை கொடை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2012 11:02
திருநெல்வேலி:தாழையூத்து சத்திரம் குடியிருப்பு வடக்குவாச் செல்வி அம்பாள் கோயிலில் நாளை(7ம் தேதி) கொடை விழா நடக்கிறது.தாழையூத்து சத்திரம் குடியிருப்பில் உள்ள வடக்குவாச் செல்வி அம்பாள் கோயிலில் நாளை(7ம் தேதி) கொடை விழா நடக்கிறது.இதை முன்னிட்டு இன்று(6ம் தேதி) இரவு 7 மணிக்கு மாகாப்பு சாந்தி தீபாராதனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு சாந்திநகர் அமுதா குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி நடக்கிறது.நாளை(7ம் தேதி) காலை 9 மணிக்கு யானை ஊர்வலத்துடன் பால்குடம் வீதிஉலா நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு இன்றைய சூழ்நிலையில் திருமண வாழ்க்கை சுகமா? சுமையா? தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடக்கிறது. (8ம் தேதி) இரவு 8 மணிக்கு மணிகண்டன் குழுவினரின் மகுட ஆட்டம் நடக்கிறது.தொடர்ந்து வரும் 11ம் தேதி காலை 10.30 மணிக்கு வருஷாபிஷேகமும், 14ம் தேதி எட்டாம் பொங்கல் அன்று இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து கிராமிய நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.