பதிவு செய்த நாள்
25
செப்
2018
03:09
கி.பி 210ல் தலையாலங்கலத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
ஆதாரம் : நெடுநல்வாடை நூல் ஆசிரியர் நக்கீரர், மன்னனின் புகழ்பற்றி கூறுவதிலிருந்து
கி.பி. 400 வரை பல பாண்டிய அரசர்கள் ஆண்டனர்
கி.பி. 400-600 வரை களப்பிரர் ஆட்சி இக்காலத்தே பாண்டியர் ஆட்சி தேய்ந்தது
கி.பி 600-662 வரை மீண்டும் பாண்டியர் ஆட்சி. பாண்டியன் கடுங்கோன் மன்னன் களப்பிரர் ஆட்சி, பல்லவர் ஆட்சி மறைவு
கி.பி. 625-640 செழியன் சேந்தன் ஆட்சி இவன் பாண்டிய மன்னன் கடுங்கோனின் பேரன்
கி.பி. 640-670 கூன் பாண்டியன் என்ற மாறவர்மன் அரிகேசரி இவன் சேந்தனின் மகன். சமண மதத்தின் சார்புடையவனாயிருந்த இவனை, திருஞானசம்பந்தர் வரவால் மன்னனின் மனம் மாறி சைவ மதத்தைத் தழுவலனான். சமணர் தோற்றழிந்த காலம். சைவம் செழித்தகாலம். சீன யாத்திரிகர் - யுவான் சுவாங் என்பவர் தமிழ்நாடு வந்த போது தனது நூலில், தமிழ்நாட்டின் சிறப்பு, வணிகச் சிறப்பு முதலிய விபரங்களைக் குறிப்பிட்டிருந்தான். வைணவமும் சைவமும் சமமாக பக்திவழிகளைப் பெருக்கியதெனலாம். இவர்க்கடுத்ததாய் கி.பி. 772 காலத்தில் மன்னன் பாண்டியன் மாறஞ்சடையான், சாத்தன் கணபதி என்பனவையாகும். இவர் வழி வந்த கடைசி மன்னன் வீர பாண்டியனுக்குப் பின் சோழர்கள் ஆட்சி இவர்கள் உதவியால் ஆண்ட மன்னன் ஜடாவர்மன் குலசேகரன். கி.பி. 1218 காலத்தில் மூன்றாங் குலோத்துங்கள் ஆட்சி.
கி.பி 1216 முதல் 1238 மாறவர்ம சுந்தரபாண்டியன் ஆட்சி.
கி.பி. 1323 பராக்கிரம பாண்டியன் ஆட்சி. இதே காலத்தில் தில்லிசுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர் என்பவன் தமிழ்நாட்டின் மீது படையெடுப்பு நடத்தினான்
கி.பி 1371 முடிய 48 ஆண்டுகள் துக்ளக், தில்லி சுல்தான் ஜலாலுதீன் அசன்சா, கியாஸ்உதீன் ஆகியோருடன் அவர்களது நிழலரசுகள் ஆட்சி.
கி.பி 1377-78 முகலாயர் ஆட்சி முடிவு. விஜய நகரப் பேரரசு ஆட்சியில் கம்பணர் ஆட்சி
கி.பி 1378 க்குப பின் பற்பல பாண்டியர் விஜயநகரப் பேரரசின் கீழ் சிற்றரசர்களாக ஆட்சி. கி.பி 1529 முதல் 1564 வரை நாயக்கர் ஆட்சி திருமலை மன்னர் வரை தமிழ்நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்து பாளையக்காரர்களால் ஆட்சி. இவர்களுக்குப் பின் ராணி மங்கம்மாவின் ஆட்சி விஜயரங்கச் சொக்கநாதர் ஆட்சி.
கி.பி. 1732 - 1736 அரசி மீனாக்ஷி ஆட்சி
இதற்குப் பின்னர் சாந்தாசகிப் ஆட்சி.
மராட்டியர் ஆட்சி முராரி ராவ், மீண்டும் சுல்தான் - அன்வாருதீன் ஆட்சி
1. கி.பி 1890 முதல் கிழக்கிந்தியக் கம்பெனியர் ஆட்சி
2. கி.பி 1796 வரை வெள்ளைக் கலெக்டர் தலைமையில் ஆட்சி
3. கி.பி 1800க்குப் பின் ஆற்காடு நவாப்பின் ஆட்சி
4. கி.பி 1804 முதல் 1947 வரை முழு வெள்ளையரின் ஆட்சி