பதிவு செய்த நாள்
28
செப்
2018
12:09
மேலக்கோட்டையூர்: கல்யாண சீனிவாச பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத சனி வார திருமஞ்சனம், அக்., 6ல், உறியடி உற்சவத்துடன், விமரிசையாக நடைபெற உள்ளது.
வண்டலூர் அடுத்த, மேலக்கோட்டையூர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள மூலவர், 7 அடி உயரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இரண்டாவது வாரமான, நாளை (செப்., 29ல்) காலை, 8:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெறுகிறது.
மூன்றாவது வாரமான, அக்., 6ல், காலை, 8:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை, 6:00 மணிக்கு தீப ஆராதனையும், தொடர்ந்து உறியடி உற்சவமும் விமரிசையாக நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை, மேலக்கோட்டையூர் கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகி கள் செய்துள்ளனர்.