ஈரோடு: தமிழகத்தில், சொந்த கட்டடங்களில் இயங்கும், கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணி மேற்கொள்ள, நடப்பாண்டுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.
சொந்த கட்டடத்தில், 10 ஆண்டுக்கும் மேல் இயங்க வேண்டும். இவ்விடம் பதிவுத் துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலய சீரமைப்புக்கு, வெளிநாட்டில் நிதி பெற்றிருத்தல் கூடாது. அதற்கான சான்று அளிக்க வேண்டும். ஒருமுறை நிதியுதவி அளிக்கப்பட்ட தேவாலய த்துக்கு, மறுமுறை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே வழங்கப்படும். உரிய ஆவணங்களுடன், ஈரோடு கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள், படிவம், சான்றிதழ் இணைய தள முகவரி, தீதீதீ.ஞஞிட்ஞஞிட்தீ@tண.ஞ்ணிதி.டிண ல் வெளியிடப்பட்டுள்ளது.