பதிவு செய்த நாள்
29
செப்
2018
12:09
கரூர்: கரூர் சத்குரு சம்ஹார மஹாபரணி சுவாமி கோவிலில், குருபூஜை மற்றும், 57வது ஆராதனை விழா நேற்று (செப்.,28ல்) நடந்தது. காலை, 6:00 மணிக்கு, யாகசாலையில், ஒன்பது ஹோமங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து, சேவல் கொடியை தாசில்தார் ஈஸ்வரன் ஏற்றி வைத்தார். பிறகு, 108 தீர்த்தங்கள் மூலம், சுவாமிக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, உற்சவமூர்த்தி திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.