பதிவு செய்த நாள்
29
செப்
2018
12:09
மொடக்குறிச்சி: நட்டாற்றீஸ்வரர் கோவிலை, மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு செய்தார். மொடக்குறிச்சி யூனியன், காங்கயம் பாளையத்தில், காவிரி ஆற்றின் நடுவே, பிரசித்தி பெற்ற நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது.
நீதிமன்ற உத்தரவுபடி, கோவில்களை மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன்படி, ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி சாந்தி, நட்டாற்றீஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தார். சுகாதாரம், பிளாஸ்டிக் கழிவு குறித்து பார்வையிட்டார். கடந்த மாதம் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கோவில் நிலத்தடி பரப்பு பாதிக்கப்பட்டதை கண்டறிந்து, அறிக்கை தயார் செய்தார். அதில், மணல் திட்டு, பூங்கா சேத மதிப்பீடுகளை கணக்கிட்டார். கோவிலுக்கு தேவையான உடனடி பணிகள் குறித்து, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.