சிங்கபெருமாள்கோவில் : சிங்கபெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள்கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, 7.36 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. செங்கல்பட்டு அடுத்த, சிங்கபெருமாள்கோவிலில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், உள்ளது. இங்குள்ள உண்டியல், மூன்று மாதங்களுக்கு, ஒரு முறை எண்ணப்படும். அந்த வகையில், இரண்டு நாட்களுக்கு முன், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில், எண்ணப்பட்டது. அதில், 7 லட்சத்து, 36 ஆயிரம் ரூபாய் கிடைத்தது.