சமீப காலமாக மக்கள் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள் உண்மை தானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2012 03:02
ஆன்மிக ஈடுபாடு என்பது மக்களிடம் எப்பொழுதுமே குறைந்ததில்லை. இடைக்காலத்தில் கோயில்களுக்குச் செல்வதில் சிறிய சரிவு ஏற்பட்டிருந்தது. காரணம் கடின உழைப்பு, குழந்தைகளின் கல்விக்காக பெற்றோர் அதிகநேரம் செலவிடுதல்,டிவி வரவு என்று எத்தனையோ சொல்லலாம். இப்போது டிவி மீதான மக்களின் கவர்ச்சி குறைந்து விட்டது. எத்தனை நாள் தான் ஒரே அழுகை தொடர்களை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்! அரைத்த மாவையே அரைக்கும் வேலையைத் தானே டிவி செய்கிறது! எனவே, தங்கள் மனஅமைதியைக் கெடுக்கும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கைவிட்டு, கோயில்களின் பக்கம் மக்கள் திரும்பியுள்ளனர்.