பதிவு செய்த நாள்
04
அக்
2018
11:10
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் முன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அங்கு, பசுமைப்பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாவட்ட நீதிபதி மகிழேந்தி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, வளாகத்தை தூய்மை பணி, பக்தர்களுக்கு அடிப்படை வசதியை ஏற்படுத்தவும், கோவில் முன் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், ஆக்கிரமிப்புகளை ஊழியர்கள் அகற்றினர். நீதிபதி மகிழேந்தி, கடந்த, 20ல், மீண்டும் ஆய்வு செய்தார். ராஜகோபுரம் முன் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு பகுதியில்,பசுமை பூங்கா அமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அங்கு, மரக்கன்றுகளை நட்டு வைத்து, பசுமை பூங்கா அமைக்கும் பணிகளை, நீதிபதி துவக்கி வைத்தார்.