பதிவு செய்த நாள்
05
அக்
2018
10:10
மதுரை: நவக்கிரகங்களில் சுபகிரமான குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு நேற்று இரவு 10.05 மணிக்கு பெயர்ச்சியடைந்தார். ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் அருகிலுள்ள தென்குடித்திட்டை, மதுரை அருகிலுள்ள குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் குரு கோவில், திருச்சி அருகிலுள்ள உத்தமர்கோவில், சென்னை பாடி வலிதாயநாதர், காஞ்சிபுரம் அருகிலுள்ள கோவிந்தவாடி அகரம் குரு கோவில் உள்ளிட்ட குருதலங்களிலும், சிவாலயங்களிலுள்ள தட்சிணாமூர்த்தி சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெறுகிறது. இதையொட்டி மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் தங்களது பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.