பட்டமங்கலத்தில் குருப்பெயர்ச்சி விழா: பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2018 10:10
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தட்சிணாமூர்த்தியை வழிபட்டனர். இக்கோயிலில் முன்னதாக குருபெயர்ச்சி ேஹாமம் நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. மூலவர் சந்தன காப்பில் வெள்ளி கவசத்திலும், உற்ஸவர் வெள்ளி ஆலவிருஷம், கார்த்திகை பெண்கள் சூழ சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதிகாலை முதலே பக்தர்கள் தட்சிணாமூர்த்தியை அர்ச்சனை செய்து வழிபட்டனர். இரவு 10:05 மணிக்கு குருப்பெயர்ச்சியானதை அடுத்து ராஜகோபுரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து குருப்பெயர்ச்சி ேஹாமத்தில் வைக்கப்பட்ட கலசத்திலுள்ள புனித நீர் கோபுரத்தில் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் இரவிலும் தொடர்ந்தது.