வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா நேற்று (அக்., 5ல்) நடந்தது. இதை முன்னிட்டு தட்சிணா மூர்த்தி க்கு, 108 கலச அபிஷேகம், சிறப்பு யாக பூஜை நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமை யில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள, வலம்புரி விநாயகர் குரு மேதா தட்சிணாமூர்த்தி பரிகார ஸ்தலத்தில் உள்ள குரு பகவானுக்கு, நேற்று லட்சார்ச்சனை நடந்தது. அமைச்சர் வீரமணி, ஆவின் தலைவர் வேலழகன், முன்னாள் மாவட்ட செயலாளர் அப்பு மற்றும் பலர் பங்கேற்றனர்.