பதிவு செய்த நாள்
08
அக்
2018
01:10
ஓசூர்: ஓசூர் பகுதியில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுகாவில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, கோவில்களில், நேற்று (அக்.,7ல்) சிறப்பு பூஜை நடந்தது. குறிப்பாக, சூளகிரி அடுத்த, கோபசந்திரம் தட்சிண திருப்பதி வெங்கடரமண சுவாமி கோவில், கெலமங்கலம் சென்னகேஸ்வர சுவாமி, தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவில், தளி வேணுகோபால சுவாமி கோவில், சூளகிரி வரதராஜ சுவாமி கோவில், பஸ்தலப்பள்ளி திம்மராய சுவாமி, ஓசூர் மலை மீதுள்ள வெங்கடரமண சுவாமி கோவிலில், நேற்று (அக்.,7ல்) சிறப்பு பூஜைகள், அலங்காரம், அபிேஷகம் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.