மதுரை: மதுரையில் நேற்று முன்தினம் (அக்., 7ல்) இரவு பெய்த மழையால், சித்திரை வீதிகளில் மழை நீர் தேங்கியது. மீனாட்சி அம்மன் சன்னதி வழியாக கோவிலுக்குள் நேற்று (அக்., 8ல்) அதிகாலை, 5:00 மணிக்கு மழை நீர் புகுந்தது. அம்மன் சன்னதி, யானை தங்கும் இடத்துக்கு வெளி பகுதி உள்ளிட்ட இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. கோவில் ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றினர்.