பதிவு செய்த நாள்
09
அக்
2018
12:10
செங்கல்பட்டு: பழமையான பெருமாள் சிலை ஒன்றை, பாலூர் செங்கல் சூளை உரிமையாளர், வருவாய் துறையிடம், நேற்று (அக்., 8ல்) ஒப்படைத்தார்.தமிழக கோவில்களுக்கு சொந்தமான சிலைகளை, பதுக்கி வைத்திருப்போர், 15 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, போலீஸ், ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், கெடு விதித்திருந்தார்.
அதன் படி, செங்கல்பட்டு அடுத்த, பாலூர் கிராமத்தில், செங்கல் சூளை நடத்தி வரும் ஒருவர், தன் வசமிருந்த, 3 அடி உயர பெருமாள் சிலையை, கிராம நிர்வாக அலுவலரிடம் நேற்று (அக்., 8ல்) ஒப்படைத்தார்.அந்த சிலை, ஓராண்டுக்கு முன், செங்கல் சூளைக்கு வந்த மண்ணில் கிடைத்தது என, அதன் உரிமையாளர், கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்துள்ளார். சிலையை, வட்டாட்சியர் அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தார்.