ராமேஸ்வரம் கோயிலில் அன்னதானத்திற்கு புதிய பாய்லர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2012 01:02
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் சுகாதார முறையில் அன்னதான உணவு தயாரிக்க பாய்லர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அன்னதான திட்டத்திற்காக சாதாரண பாத்திரங்களில் சமையல் செய்யப்பட்டு வந்தது. தற்போது இதை தவிர்த்து சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பதற்காக ரூ 3.50 லட்சம் செலவில் ஸ்டீல் பாய்லர்கள் நிறுவப்பட்டுள்ளன. கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம் கூறியதாவது: தற்போது தினமும் 300 பேரும், அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் 400க்கும் மேற்பட்டோரும் அன்னதானம் சாப்பிடுகின்றனர். பாய்லர் மூலம் சமைக்கப்படுவதால் கூட்டத்திற்கு தகுந்தார்போல் உடனடியாக கூடுதலாக சமைக்க முடியும். எரிபொருள் செலவு குறையும். பக்தர்களின் வசதிக்காக கோயில் தெற்கு நந்தவனத்தில் ரூ. 45 லட்சத்தில் சமையல் அறையுடன் கூடிய அன்னதான கூடம் கட்டும் பணி விரைவில் துவங்கப்படவுள்ளது, என்றார்.