பதிவு செய்த நாள்
10
அக்
2018
11:10
காஞ்சிபுரம்:தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு, கோதாவரி நதி நீரை எடுத்து வர, புனித நீர் ரதம், காஞ்சி சங்கர மடத்தில் இருந்து புறப்பட்டது.தாமிரபரணி புஷ்கர புனித நீராடல் விழா, வரும், 11ல் துவங்கி, 22 வரை நடக்கிறது.
இந்த விழாவை முன்னிட்டு, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில், 12 நதிகளில் இருந்து புனித நீர் எடுத்து வரப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் இருந்து கோதாவரி நதியில் புனித நீர் எடுத்து வர, சங்கர மடத்தில் இருந்து ரதம் புறப்பட்டது.நிகழ்ச்சியில், பா.ஜ., மூத்த தலைவர், இல.கணேசன் உட்பட, பலர் கலந்து கொண்டார்.
காஞ்சி சங்கர மடத்தில் இருந்து, காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் உத்திரமேரூர், மானாம்பதிய வழியாக ரதம் சென்றது.மற்ற நதிகளின் புனித நீர் ரதங்கள், அவினாசி, புதுச்சேரி, மயிலாடுதுறை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேலூர், கும்பகோணம், சென்னை, கோவை, பவானி, தேனி, ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து புறப்பட்டு, மதுரையில் சங்கமமாகி, அங்கிருந்து தாமிரபரணி நதியை சென்றடைகின்றன.முன்னதாக, சங்கர மடத்தில் இருந்து ரதம் புறப்படும் போது, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர், புனித ரத வாகனங்களில் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். அதை, எதிர்த்து, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சாலையில் அமர்ந்து, போலீசாருக்கு எதிராக கோஷமிட்டு, கலைந்து சென்றனர்.