மதுரையில் ஷீரடி சாய்பாபாவின் நூறாவது ஆண்டு மஹா சமாதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2018 12:10
மதுரை;மதுரையில் ஷீரடி சாய்பாபாவின் நூறாவது ஆண்டு மஹா சமாதி திருவிழா குழுத் தலைவர் செல்வம் கூறியதாவது:சேதுபதி பள்ளியில் மதுரையில் ஷீரடி என்னும் நிகழ்வு இன்று(அக்.,10) முதல் 21 வரை நடக்கிறது. இதற்காக மாதிரி ஷீரடி கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி நாட்களில் மாலை 5:00 - இரவு 9:00 மணி வரை, இதர நாட்களில் காலை 6:00 - இரவு 9:00 மணி வரை வழிபடலாம். அனுமதி இலவசம். அக்.,19ல் ரத்த தான முகாம் நடக்கிறது. அக்.,21ல் மதுரை ஆதினம் மடத்தில் இருந்து மாசி வீதிகளில் திருஉலா நடக்கும் என்றார். செயலாளர் சாய்சரவணன், ஆலோசகர் உஷா உடன் இருந்தனர்.