மானாமதுரை: மானாமதுரை அருகே மழை வேண்டி மேலமேல்குடியில் தலைச்சுமையாக பொங்கல் பொருட்களை கிராம பெண்கள் தூக்கி சென்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மானாமதுரை அருகே மேலமேல்குடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையின் போது இந்தகிராம கண்மாய்க்கு தண்ணீர் வராததினால் கிராமத்தினர் எல்லை தெய்வங்களுக்கும், கண்மாய்க்கு அருகில்உள்ள அழகுநாச்சி அம்மனுக்கும் பொங்கல் வைத்து வழிபாடு செய்வதற் காக அனைவரும்ஒன்றாக சேர்ந்து பொங்கல் பொருட்களை தலைச்சுமையாக கொண்டு சென்று அம்மனுக்குபொங்கல் வைத்து சிறப்பு அபிேஷகம் செய்து வழிபட்டனர்.