புத்தி - சியாமளை அகங்காரம் -வாராஹி புன்சிரிப்பு -கணபதி 6 ஆதார சக்கரங்கள் -ஷடாம்னாய தேவதைகள் விளையாட்டு -பாலை அங்குசம் -சம்பத்கரி பாசம் -அச்வாரூடை இடுப்பு- நகுலி
மூலாதாரம் முதல் பிரம்மரந்திரம் வரை தேவதைகள் 36. இவளே, பஞ்சப் பிராணனாகவுமிருக்கிறாள்.
உடல் - பிராணண். வாக்கு - அபானன். காதுகள் -வியானன் மனதில் -சமானன். அகண்டத்தில் -உதானன். எனவாகவிருக்கிறாள். தகராகாசம் என்ற மனத்தில் ஸ்ரீசக்கரத்தையும், பிந்துஸ்த்தானத்தை அம்பிகையாகவும் வழிபடுவதும் தியானமாகும்.
ஸ்ரீசக்கரவழிபாடு
ஸ்ரீ சக்கரத்திற்கு உலோகங்களில் தாமிரம் - செப்புத்தகடு உகந்தது. யந்திரத்தை ஒருநாளும் பூஜைசெய்யாது வைத்திருக்கக்கூடாது. அனுதினம் பூஜை செய்ய வேண்டும். பெரியோர்களையும், தாய்-தந்தையரையும், குலதெய்வத்தையும், வணங்கி இச்சக்கர பூஜையைச் செய்யலாம். தீட்சை பெற வேண்டுமென்பதில்லை. மனம், உடல், சுத்தத்தோடு பூஜையறையில் ஒரு பீடத்திலோ, அல்லது படமாக்கி மாட்டிவைத்தோ, அம்பாளின் ஸ்லோகங்களை, மந்திரங்களைக் கூறி, பூக்களால் அர்ச்சித்து, தூப தீபம் காட்டி நிவேதனம் செய்து, இறுதியாக கற்பூரஹாரத்தி காட்டி, வணங்கி வரலாம். லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் ஏற்றதாகும்.