பதிவு செய்த நாள்
13
அக்
2018
11:10
நவராத்திரியின் ஐந்தாம் நாளன்று, அம்பிகையை மகேஸ்வரியாக அலங்கரிக்க வேண்டும். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். அம்பாளுக்கு, மஹதீ என்று ஒரு பெயர் உண்டு. அளவிட முடியாத பெரும் சக்தியாகவும், சர்வமங்களம் தருபவளாகவும், தர்மத்தின் வடிவமாகவும் இருக்கிறாள். பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருபவளை காண கண் கோடி வேண்டும்.நவராத்திரி பூஜை காலத்தில், ஸ்ரீ தேவியை ஒன்பது மடங்கு அதிகமாக பூஜிக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஏற்ப கொண்டாடினால், அம்பிகையும் நம்மை கொண்டாடுவாள் என்பது நம்பிக்கை.
மீனாட்சி அம்மன் ஒரு மீனின் குணத்தைப் போல அருள்புரிபவள். ஒரு மீன், தன் முட்டைகளை கவனத்துடன் பாதுகாத்து, குஞ்சு பொரித்து, அதற்கு எப்படி உயிர் கொடுக்கிறதோ, அது போல, மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவள் மீனாட்சி. அதனால் தான், மீன் போன்ற கண்களை உடையவள் என்னும் அர்த்தம் விளங்க, மீனாட்சி, கயற்கண்ணி என்ற பெயரோடு விளங்குகிறாள்.கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பயனை பெற, அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.அந்த அருளை பெற, அம்பாள் மகேஸ்வரியை வழிபடுவது சக்தி வாய்ந்தது.வழிப்பாட்டு முறைஐந்தாம் நாள் வழிபாட்டில், ஆரஞ்சு நிறத்தில் உணவையும், பிரசாதத்தையும் தயார் செய்து சாப்பிடுவது, நன்மை பயக்கும். ஆரஞ்சு நிற லட்டு, பழங்களை படையலுக்கு வைத்து சாப்பிடுவது சிறப்பு.காலையில், பால் சாதம்-.பசும்பாலில் குழைய வேக வைத்த சாதத்தைச் சேர்த்து, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கவும். நெய்யில் முந்திரி, உலர் திராட்சை வறுத்து சேர்த்தால், தெய்வீக சுவையுடன், பிரசாதம் தயார்.
இந்த சுவையான பால் சாதம் தவிர, புளியோதரை, உளுந்தன்னம், இனிப்பு, மாதுளம் பழம் கலந்த தயிர் சாதம் படைத்தும் வழிபடலாம்.மாலையில் மக்காச்சோளம் - வெஜிடபிள் சுண்டல். சோளத்தைச் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து, அதில் நறுக்கிய கேரட், வெங்காயம், வெள்ளரிக்காய் சேர்த்து தாளித்து விட, பூஜைக்கு வருபவர்களுக்கு, உற்சாகமாய் அமைந்துவிடும் இந்த பிரசாதம்.மலர்கள் பாரிஜாத மலர், பவளமல்லி, சாம்பல் நிற இலைகள் கொண்டு பூஜிப்பது, அதிக பலன்களை தரும். பிச்சிப்பூ, மரிக்கொழுந்து, வில்வ இலை போன்றவற்றைத் துாவுவது நல்லது.கொடுக்க வேண்டிய தாம்பூலம் பதினோரு வகையான மங்கலப் பொருட்கள் கொடுக்க வேண்டும். முக்கியமாய், வெளி குடும்பத்து சிறுமியர் ஒன்பது பேருக்கு, பட்டுப் பாவாடை - சட்டை எடுத்து தானம் செய்வதும், ஐந்து சுமங்கலிகளுக்கு அன்னதானம் செய்து, புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெறுவதும், குடும்பத்திற்கும், பின் வரும் சந்ததியருக்கும் நன்மை நல்கும்.பாட வேண்டிய ராகம்அடாணா, பஞ்ச வர்ண கீர்த்தனைகோலம்கடலை மாவு கொண்டு பறவையினம் போல போட வேண்டும்.ரிஷப வாகனரிஷப வாகனத்தில் எழுந்தருளியுள்ள அம்பாளை வணங்குவதற்கு காரணம் உண்டு. எந்த பிரதிபலனும் காணாமல் தன் கடின உழைப்பை மட்டும், ரிஷபம் எப்படி மனிதனுக்கு தந்துக் கொண்டிருக்கிறதோ, அது போல், சாதாரண மக்கள் உண்மையான பக்தியுடன், இறைவனுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதே குறிக்கோள்.
கொலு பொம்மைகள் களிமண்ணால் மட்டும் தான்பழங்காலத்தில் கொலு பொம்மைகள் செய்வதற்கு தேவையான, களிமண் குளங்கள், கால்வாய்கள் மற்றும் ஆற்றுப் படுகைகளிலிருந்து எடுக்கப்பட்டது. வருடம் முழுவதும் படிந்து இருக்கும் களிமண்ணை துார்வாருதலை போல இந்த செயல் இருக்கும். இதனால், நீர் நிலைகளின் நீர் தேக்கும் திறன் அதிகரிக்கப்பட்டது. இது, விவசாய பொருளாதார வளர்ச்சிக்கு மறைமுகமாய் வித்திட்டது எனலாம்.எந்த நாள் விரதம் பலன் தரும்?விரதம் இருப்பது வெறும் பட்டினி இருப்பது என்பதாகாது. அதன் மகிமையும், பலனும் விரதம் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவரும் அறிந்ததே.
• திங்கள்: கணவரின் பரிபூரண அன்பை பெறலாம்.
• செவ்வாய்: கணவன், மனைவி தகராறு நீங்கி வாழலாம்.
• புதன்கிழமை: நோய்கள் நீங்கும்• வியாழன்: புத்திர பாக்கியம் கிடைக்கும்.
• வெள்ளி: கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
• சனி: செல்வம் பெருகும்.
• ஞாயிறு: நீடித்த நோயிலிருந்து விடுதலை பெறலாம். மேற்கொண்டு நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
• விரதம் மேற்கொள்பவர்கள் தரையில் படுத்து உறங்குவதும் மரபு
பூஜை நேரம் காலை: 9:00 - 10:30 மணிமாலை: 6:00 - 7:30 மணி.
மதுரை மீனாட்சியம்மன் நாளை வலை வீசியருளல் கோலத்தில் காட்சியளிக்கிறாள்.
வேதத்தின் பொருளை பார்வதிக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார் சிவன். அப்போது அவளது கவனம் சிதறியதால் மீனவப்பெண்ணாக பிறக்கும்படி சபித்தார். தாயை சபித்ததால் வேத ஓலைச்சுவடிகளை கடலில் வீசினார் முருகன். இதனால் கோபமுற்று முருகனை ஊமையாகவும், முருகனை கைலாயத்திற்குள் அனுமதித்து வேடிக்கை பார்த்த நந்திதேவரை சுறாவாகவும் பிறக்கும்படி சபித்தார் சிவன். மீனவர் குலத்தில் மன்னரின் மகளாக பிறந்தாள் பார்வதி. இந்நிலையில் கடலுக்குள் பயங்கர சுறாமீன் ஒன்று தொல்லை கொடுத்து வந்தது. அதைக் கொல்பவருக்கு தன் மகளை மணமுடித்து தருவதாக அறிவித்தார் மன்னர். அங்கு மீனவ இளைஞராக வடிவில் வந்த சிவன் சுறாவின் கொட்டத்தை அடக்கினார். அதன்பின் பார்வதியுடன் மணக்கோலத்தில் காட்சியளித்தார். இந்த கோலத்தைப் பார்த்தால் எண்ணியதெல்லாம் நிறைவேறும்.
நைவேத்யம்: பால்சாதம், கடலைப்பருப்பு சுண்டல் (பூம்பருப்பு), பாயாசம், சர்க்கரைப் பொங்கல்.
பாட வேண்டிய பாடல்
ஆளுகைக்கு உன்றன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உன்றன் விழியின் கடையுண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை நின்குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே.