ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி 4ம் நாள் விழாவையொட்டி, பர்வதவர்த்தினி அம்மன் சிவதுர்க்கா அலங்காரத்தில் பக்தருக்கு காட்சியளித்தார். நவராத்திரி விழா யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அக்.,9ல் பர்வதவர்த்தினி அம்மனுக்கு கோயில் குருக்கள் காப்பு கட்டி விழா துவங்கியது. இதனைதொடர்ந்து 9 நாள்கள் கோயிலில் நவராத்திரி விழாவில் அம்மன் அன்னபூரணி, மகாலெட்சுமி உள்ளிட்ட பல அலங்காரத்தில் பக்தருக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார். 4ம் நாள் விழாவான நேற்று கோயிலில் அம்மன் சன்னதி அருகில் கோயில் குருக்கள் அம்மனுக்கு சிவதுர்க்கா அலங்காரமிட்டு மகா தீபாராதனை நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். இன்று(அக்.,13) இரவு 8 மணிக்கு கோயிலில் அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் பக்தருக்கு காட்சியளிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி செய்து வருகிறார்.